/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
‛'நம்பர் பிளேட்' இன்றி இயங்கும் டூவீலர்களால் விபத்து அபாயம் கண்டு கொள்ளாத போலீசார்

ADDED : செப் 19, 2025 02:26 AM

தேனி: தேனி நகர்பகுதியில் 'நம்பர் பிளேட்' இன்றி பல்வேறு பெயர்கள் பொருத்தி டூவீலர்கள் வலம் வருகின்றன. இந்த டூவீலர்களால் விபத்து அபாயம் இருந்தும் போலீசார் கண்டும் காணாது போல் உள்ளனர்.
தேனி மாவட்ட தலைநகராக உள்ளது.இங்கு பஸ், கார் பயன்பாட்டினை விட ஆட்டோ, டூவீலர்கள் பயன்பாடு அதிகம் உள்ளது. டூவலர்களில் நம்பர் பிளேட் இருக்க வேண்டிய இடத்தில் விதிமீறி பலர் விருப்பமான பெயர்களை பதிவு செய்து ஓட்டுகின்றனர். இவர்கள் விபத்து ஏற்படுத்தினாலும், பதிவு எண்களை குறித்து வைப்பதில் சிக்கல் உள்ளது. சில டூவீலர்களில் நம்பர் பிளேட்டு இன்றியும் இயக்கப்படுகிறது. இந்த டூவிலர்களை சிலர் ரேஸ்கள் மற்றும் குற்ற செயல்களில் பயன்படுத்துகின்றனர். சிறுவர்கள் டூவீலர் இயக்குவதும் அதிகரித்துள்ளது.
ஆனால், நகர்பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யும் போலீசார், டிராபிக் போலீசார் நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்ளில் வரும் வாலிபர்கள், சிறுவர்களை கண்டு கொள்வதில்லை. நம்பர் பிளேட் இன்றியும், பெயர்களை பதிவு செய்தும் டூவீலர்கள் ஓட்டுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.