
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
--பெரியகுளம் : பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயில் தைமாத பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாரநாகராஜருக்கும், நந்தி பகவானுக்கும், பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட 21 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பூக்களை கொண்டு அதிகார நந்தீஸ்வரர், அதிகார நாகராஜருக்கும், சிவனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ரவீந்திரநாத் எம்.பி., உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை டாக்டர் மகாஸ்ரீ ராஜன் செய்திருந்தார். கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயில்களில் பிரதோஷ பூஜைகள் நடந்தன.
--

