ADDED : ஜன 24, 2024 05:42 AM

போடி, : போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர். போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், சுப்பிரமணியர் சுவாமி கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள்நடந்தது.
பெரியகுளம்: ஈச்சமலை மகாலட்சுமி கோயில் தைமாத பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாரநாகராஜருக்கும், நந்தி பகவானுக்கும், பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட 21 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூக்களை கொண்டு அதிகார நந்தீஸ்வரர், அதிகார நாகராஜருக்கும், சிவனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ரவீந்திரநாத் எம்.பி., உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை டாக்டர் மகாஸ்ரீ ராஜன் செய்திருந்தார். கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயில்களில் பிரதோஷ பூஜைகள் நடந்தன.

