
கம்பம்:கம்பமெட்டு வனப்பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கேரள பாதிரியாரின் அடையாளம் தெரிந்தது.
தமிழக வனப்பகுதியான கம்பமெட்டு, மந்திப்பாறை என்னும் இடத்தில் நேற்று முன்தினம் எரிந்த நிலையில் ஆண் உடல் கிடந்தது. இருமாநில வனத்துறையினர், போலீசார் அங்கு சென்றனர். கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா அந்த உடலை தேனி மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் கேரளா கம்பமெட்டு போலீஸ் ஸ்டேஷனில் மந்திப்பாறை சர்ச்சில் பாதிரியராக பணிபுரிந்த ஆப்ரகாம் 56, என்பவரை காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. உடலின் அங்க அடையாளங்கள், அருகில் கிடந்த கண் கண்ணாடி போன்றவற்றை வைத்து இறந்ததுஆப்ரகாம் என்பதை உறுதி செய்தனர்.
இவர் பத்தனம்திட்டா மாவட்டம் சித்தூரை சேர்ந்தவர். சர்ச்சில் 2 ஆண்டுகளாக பணி செய்தார். மெழுகுவர்த்தி விற்பனையும் செய்தார். தொழிலில் நிறைய கடன் பெற்றுஉள்ளார்.
இதனால் மனமுடைந்து மந்திப்பாறை வனப்பகுதியில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

