/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிக்கன் கடைகளில் மது விற்றால் நடவடிகை
/
சிக்கன் கடைகளில் மது விற்றால் நடவடிகை
ADDED : ஜன 19, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுாரில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடையை ஒட்டி அரசு அனுமதி பெற்ற மதுபார்கள் உள்ளன.
மெயின் பஜார், எல்.எப்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சிக்கன் கடைகள் அதிகம். இக்கடையை நடத்துபவர்கள் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இதனால் அனைத்து சிக்கன் கடைகளும் பார்களாக இயங்கி வந்தன.
இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன், எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு மது பாட்டில்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

