/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசியலுக்காக புதிய கல்விக் கொள்கையை தி.மு.க., எதிர்க்கிறது புதிய தமிழகம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

ADDED : மார் 28, 2025 02:21 AM

தேனி:''அரசியல் காரணத்திற்காக மட்டும் புதிய கல்விக் கொள்கையை தி.மு.க., எதிர்க்கிறது'' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
தேனியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
அருந்ததியர் சமுதாயத்தினருக்கு மட்டும் 3 சதவீத உள்இட ஒதுக்கீடு என 2009ல் கருணாநிதி அறிவித்தபோது எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது இந்த உள் இட ஒதுக்கீட்டால், மற்ற பட்டியல் இன சமுதாயங்கள் வேலை வாய்ப்பில் பாதிக்கப்படுகிறது. அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
மாஞ்சோலை போல் தேனியில் மேகமலை, கோவையில் வால்பாறை, நீலகிரியில் குன்னுார், கோத்தகிரியில் வசிக்கும் தொழிலாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே 2006 வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டம் அமைக்க சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என எதிர்ப்பு எழுந்தது. ஆனால் குவாரிகள் அமைத்து கனிமங்களை எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதா.
பா.ஜ., உடன் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.,வினர் தங்கள் நிலைபாட்டை கூறுவர். அவர்கள் வெளியில் கருத்துக்களை கூறுவதை விட தங்களுக்குள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். அமலாக்கத்துறை முறையாக ஆய்வு செய்தால் டாஸ்மாக் ஊழல் ஒருலட்சம் கோடியை தாண்டும். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என ஆதாரமின்றி குற்றச்சாட்டு தெரிவிக்கக்கூடாது. மும்மொழி கொள்கை தமிழக மக்களுக்கு எதிரானது இல்லை. இரு மொழிக்கொள்கை இங்கு அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் உள்ளது. அரசியலுக்காக மட்டுமே தி.மு.க.,வினர் ஹிந்தி, புதிய கல்வி கொள்கையை எதிர்க்கின்றனர். தமிழை யாராலும் அழிக்க முடியாது என்றார்.