ADDED : ஜன 21, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: போடி- மதுரை இடையே ரயில் போக்குவரத்து 2023 ஜூன் 15ல் துவங்கப்பட்டது.
இப்பாதையில் மதுரை வரை தினசரி ரயிலும், சென்னைக்கு வாரத்தில் 3 நாட்கள் ரயிலும் இயக்கப்படுகிறது.
தற்போது இந்த பாதை மின் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தேனி ரயில்வே ஸ்டேஷன், அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பிரத்தியேக இயந்திரம் பொருத்தப்பட்ட ரயில் மூலம் தண்டவாளம்
பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.இப்பணி பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில் தண்டவாள பராமரிப்பு பணிக்கு அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாரமரிப்பு பணிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. என்றனர்.

