sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெருகும் பிராய்லர் கறிக்கோழி இறைச்சி கடைகளை முறைப்படுத்துங்க சார்..

/

பெருகும் பிராய்லர் கறிக்கோழி இறைச்சி கடைகளை முறைப்படுத்துங்க சார்..

பெருகும் பிராய்லர் கறிக்கோழி இறைச்சி கடைகளை முறைப்படுத்துங்க சார்..

பெருகும் பிராய்லர் கறிக்கோழி இறைச்சி கடைகளை முறைப்படுத்துங்க சார்..


ADDED : பிப் 02, 2024 12:01 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் முழுவதும் பிராய்லர் கறிக்கோழி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் பொது இடங்களில் கொட்டுவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. இக் கழிவுகளை உள்ளாட்சிகள் முறையாக அகற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசைவ பிரியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆடு, நாட்டுக்கோழி, மீன் ஆகியவற்றின் இறைச்சி விலை அதிகரிப்பால் பிராய்லர் கோழிக்கறி பயன்பாடு அதிகரித்து வருகிறது.

குக் கிராமம் முதல் பெருநகங்கள் வரை சிறிய தெருக்கள் முதல் மெயின் ரோடு வரை நூற்றுக்கணக்கான பிராய்லர் கறிக்கோழி கடைகள் புற்றீசல்கள் செயல்படுகின்றன.

அசைவ பிரியர்கள் தேவையை கருதி எந்நேரமும் கோழிக்கறி விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை எண்ணெய்யில் பொறித்து விற்பனை செய்யப்படும் மசாலா கலந்த பிராய்லர் கோழிக்கறி விற்பனை மாவட்டம் முழுவதும் சில டன் அளவில் இருக்கும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிய அளவிலான ஒரு கோழி கடைகளில் தினமும் 20 முதல் 100 கோழிகள் வரை உறித்து விற்பனை செய்யப்படுகின்றன. ஓட்டல்களில் தினமும் மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

பிராய்லர் கடைகளில் இருந்து வெளியேறும் கோழிகழிவுகளை நீர்வரத்து ஓடைகள், பொது இடங்கள், கண்மாய், குளக்கரைகளில் கொட்டி விட்டு செல்கின்றனர். குப்பை கிடங்குகளிலும் மொத்தமாக கொட்டி விடுகின்றனர். இவ்வாறு கொட்டப்படும் கழிவுகள் அப்பகுதியில் துர்நாற்றத்துடன் சுற்றுச்சூழலையும் பாதித்து நோய் தொற்றுக்கு வழி ஏற்படுத்துகிறது. பிராய்லர் கோழிக்கறி கழிவுகளை தெரு நாய்கள் தின்று செல்கின்றன. கழிவுகளை தொடர்ந்து சாப்பிடும் நாய்களுக்கு தோல் நோய் பாதிப்பிற்குள்ளாகின்றன.

நோய்தொற்று பாதித்த நாய்கள் அனைத்து ஊர்களிலும் பரவலாக சுற்றித் திரிகின்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் இல்லை. பொது இடங்களில் கொட்டப்படும் கோழிக்கறி கழிவுகள், தொற்றுநோய் பாதித்த நாய்களால் என்ன பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் பலருக்கும் உள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சுகாதாரக்கேடு


பிராய்லர் கோழிக்கறி கடைகள் அமைக்க சுகாதாரத்துறை, உணவு கட்டுப்பாடு துறையினர் எந்த கட்டுப்பாடும் விதிக்காததால் தங்கள் இஷ்டத்திற்கு கடைகளை துவக்கி பொது இடங்களில் சுகாதாரத்துக்கேடு ஏற்படுத்துகின்றனர். கோழி கழிவுகளை முறையாக கையாழ உள்ளாட்சி நிர்வாகங்கள் தனி இடம் ஒதுக்கி முறையாக அழிக்க வேண்டும். பொது இடங்களில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரத் துறையினர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி இக் கடைகளை ஆய்வு செய்து விற்பனையாகும் இறைச்சியின் தரம் குறித்து சான்று வழங்க வேண்டும். தகுதி இல்லாத கடைகளை மூட வேண்டும். மாவட்ட நிர்வாகம் மூலம் ஒருங்கிணைந்த நடவடிக்கை இருந்தால் மட்டுமே பிராய்லர் கோழிக்கறி கடைகளால் ஏற்படும் சுகாதாரக் கேட்டை சரி செய்ய முடியும் என்றனர்.






      Dinamalar
      Follow us