/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையத்தில் ரூ.2.78 கோடியில் ரோடு புதுப்பிக்கும் பணி முடக்கம் தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் அவதி

ADDED : ஜூன் 15, 2025 06:58 AM
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் ரோடு புதுப்பிக்க ரூ. 2.78 கோடிக்கு டெண்டர் விட்டும் பணி துவக்காமல் முடங்கியுள்ளதால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நகரில் விரிவாக்க பகுதிகளாக மின்நகர், தாமஸ் காலனி , தென்றல் நகர், பிடிஆர் காலனி, இந்திரா காலனி, அப்துல் கலாம் நகர் என புதிது புதிதாக குடியிருப்புகள் உருவாகி வருகிறது.
'ஜல்ஜீவன்' திட்டத்தில் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகள் 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது .
இதில் வடக்கு, மேற்கு, கிழக்கு ரத வீதிகள், மெயின்ரோடு முழுமையாக சேதமடைந்தது. ரோடுகளை புதுப்பிக்க ரூ.2.78 கோடியில் ஒப்பந்தம் விடப்பட்டது. தேரோட்டம் நடைபெற வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் ரத வீதிகளை தற்காலிகமாக பேரூராட்சி பராமரிப்பு செய்தது. மெயின்ரோட்டில் நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டது.
பல்வேறு தரப்பில் இருந்து வந்த அழுத்தத்தை தொடர்ந்து டெண்டர் எடுத்த ஒப்பந்தகாரர் பணிகளை மேற்கொண்டார்.
ஆனால் ரதவீதிகள், ஞானம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகள் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது கட்டுமான பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதை காரணம் காட்டி ஒப்பந்ததாரர் பணிகளை நிறுத்தியுள்ளார்.
டெண்டர் பெறும் போது நிபந்தனைகளை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் தற்போது பொருள்கள் விலை உயர்வை காரணம் காட்டி வேலை செய்யாமல் இருப்பதை பேரூராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருகிறது.
கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தத்தை ரத்து செய்து மறு ஒப்பந்தம் கோர பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவிட வேண்டும்.