/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிவ கணேச கந்தபெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா
/
சிவ கணேச கந்தபெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜன 23, 2024 05:14 AM

தேனி: தேனி என்.ஆர்.டி., சிவ கணேச கந்தபெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பத்திற்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது வானில் கருடன் பறந்து சென்றதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சவுந்தரராஜ சுவாமி, உமாமகேஸ்வரி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை டாக்டர் ராஜ்குமார் -சற்குணம், டாக்டர்கள் தியாகராஜன், மங்கா, ராகவ், சித்தார்த் குடும்பத்தினர், திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.
விழாவில் எல்.எஸ்.,மில் இயக்குனர் மணிவண்ணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, ஒப்பந்ததாரர் பாண்டியராஜ், வர்த்தக காங்., மாவட்டதலைவர் சங்கரநாராயணன், விநாயகா டைல்ஸ் பாலபிரகாஷ், கமலக்கண்ணன், தேனி பிளைவுட்ஸ் ராஜசேகரன், விஜய்பாபு, என்.பி.ஆர்., தங்கமாளிகை சத்யரநாராயணன், வைகை அரிமா சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

