/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலா பகுதிக்கு வந்த படையப்பா யானையால் கடைகள், கார்கள் சேதம்
/
சுற்றுலா பகுதிக்கு வந்த படையப்பா யானையால் கடைகள், கார்கள் சேதம்
சுற்றுலா பகுதிக்கு வந்த படையப்பா யானையால் கடைகள், கார்கள் சேதம்
சுற்றுலா பகுதிக்கு வந்த படையப்பா யானையால் கடைகள், கார்கள் சேதம்
ADDED : ஜன 24, 2024 05:14 AM

மூணாறு : மாட்டுபட்டி 'எக்கோ பாய்ண்ட் ' பகுதிக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் மூன்று முறை வந்த படையப்பா கடைகள், கார்கள் ஆகியவற்றை சேதப்படுத்தின.
மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா காட்டு யானை நேற்று முன்தினம் அதிகாலை முக்கிய சுற்றுலா பகுதியான மாட்டுபட்டி 'எக்கோ பாய்ண்ட்' பகுதிக்குச் சென்றது.
அங்கு ரோட்டோரம் உள்ள பரமன், கோவிந்தன், லெட்சுமணன், தாமஸ் ஆகியோரின் கடைகளை சேதப்படுத்தி விட்டு அன்னாசி, சோளம், காரட் உள்பட பல்வேறு பொருட்களை தின்றது.
ஓட்டம்: அதே பகுதியில் காட்டிற்குள் பகல் முழுவதும் முகாமிட்ட படையப்பா மாலை 6:00 மணிக்கு மீண்டும் 'எக்கோ பாய்ண்ட்' பகுதிக்கு வந்தது.
அதனை சற்றும் எதிர்பாராத சுற்றுலா பயணிகள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்.
அங்கு ஊராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் சிலர் விற்பனைக்காக வைத்திருந்த அன்னாசி பழம், காரட் உள்ளிட்டவற்றை தின்ற யானையை உள்ளூர்வாசிகள் விரட்டினர்.
மீண்டும் வந்தது: அதன்பிறகு இரவு 8:30 மணிக்கு மீண்டும் எக்கோ பாய்ண்ட் பகுதிக்கு வந்த படையப்பா அந்த வழியில் வீடுகளுக்குச் சென்ற குண்டளை எஸ்டேட்டைச் சேர்ந்த பாண்டி, சஞ்ஜீவ் ஆகியோர் கார்களை சேதப்படுத்தியது. அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
கவலை: எக்கோ பாய்ண்ட் பகுதிக்கு அடிக்கடி வரும் காட்டுயானைகள் பெரும் பொருள் சேதங்களை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மூன்று முறை படையப்பா வந்ததால் வர்த்தகர்கள் கவலை அடைந்தனர்.

