/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உடல் உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை
/
உடல் உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை
ADDED : ஜன 24, 2024 05:43 AM

தேனி : விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட அனுமந்தம்பட்டி பட்டதாரி வாலிபர் அன்புராஜன் 23, உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது.
உத்தமபாளையம் அனுமந்தம்பட்டி வின்சென்ட்,இவரது மனைவி வேளாங்கண்ணி.
இவர்களது இளையமகன் அன்புராஜன் முதுநிலை பட்டதாரி. இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அனுமந்தன்பட்டியில் ஜன.,20ல் டூவீலரில் செல்லும் போது எதிரே வந் வேன்மோதி படுகாயமடைந்து தேனி மருத்துவக்கல்லாரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இங்கு மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.
அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்குவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதனையெடுத்து அன்புராஜனின் இதயம், கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல், தோல் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதன்முறையாக உடல்உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அன்புராஜனின் பெற்றோரை நேரில் சந்தித்து கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ., மகா ராஜன் ஆறுதல் தெரிவித்தனர்.
அரசு சார்பில் அவரது உடலுக்கு டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஆர்.டி.ஓ., பால்பாண்டி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

