/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அச்சுறுத்தும் தெரு நாய்களால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள் :
/
அச்சுறுத்தும் தெரு நாய்களால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள் :
அச்சுறுத்தும் தெரு நாய்களால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள் :
அச்சுறுத்தும் தெரு நாய்களால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள் :
ADDED : ஜன 24, 2024 05:19 AM

தேனி: 'பேவர் பிளாக்' கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமான தெருக்களில் விபத்து அபாயம், அச்சுறுத்தலாக சுற்றித் திரியும் தெருநாய்கள் தொல்லை, சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு தேங்கும் கழிவு நீரால் துர்நாற்றம், மழைக் காலங்களில் கொசுக்களால் இடையூறுகள்,' போன்ற பல்வேறு வசதி குறைபாடுகளால் தேனி அல்லிநகரம் நகராட்சி 11வது வார்டு அக்ரஹாரம் தெரு மக்கள் குமுறுகின்றனர்.
இந்த வார்டில் அக்ரஹாரம் தெரு, மதுரை வீரன் கோயில் தெரு, அதன் குறுக்குத்தெரு, மொக்கையன் தெரு, வெள்ளையன் தெரு, சிட்டுப்பிள்ளைத் தெரு, ஐயப்ப நாயுடு தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. 360க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் முறையாக பைண்டிங் செய்யாததால் ரோடு குண்டும் குழியுமாக இருப்பது இப்பகுதியின் பிரதான பிரச்னையாக உள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் கீதா, கஸ்துாரி, லட்சுமி, சாரதா, சாந்தி ஆகியோர் கூறியதாவது:
நாய்கள் தொல்லை
அக்ரஹாரத் தெருவில் மாணவ, மாணவிகளுக்கு இளைஞர்கள் ேஹாம் டியூசன் மூலம் பாடம் கற்றுத்தருகின்றனர். இதற்காக காலை, மாலை, இரவில் வந்து செல்லும் மாணவர்களை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து மிரட்டுகிறது.
இந்நாய் அச்சுறுத்தலுக்கு பெண்களும் பாதிக்கப்படுகிறோம். தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி சுகாதார ஆய்வாளர்களிடம் புகார் அளித்தும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. நாய்களை பிடித்துச் சென்று கருத்தடை ஆப்பரேஷன் செய்திட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதாள சாக்கடை பிரச்னை
இப்பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பிற்கு பணம் செலுத்தி உள்ளோம்.
அதிலுள்ள கழிவுநீரின் ஈரப்பதம் சுவரில் ஏறி, சுவர் சேதமடைந்து விட்டது. கழிநீர் வடிகால் வசதி முறையாக இல்லாததால் வீட்டின் சுவரில் நீர்ப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் பாதாள சாக்கடை சீரமைக்க நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும், இப்பக்கம் யாரும் வந்தபாடில்லை. கவுன்சிலர் இப்பகுதிக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வார்டில் உள்ள 16 தெருக்கள், அதன் குறுக்குத் தெருக்கள் மிகவும் மோசமாக நடக்க முடியாதபடி குண்டும் குழியுமாக உள்ளன. இத்தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்து, தெருக்களை சாக்கடை கட்டமைப்புகளை கட்டி, சீரமைக்க வேண்டும்.
மதுரை வீரன் கோயில் தெருவில் தண்ணீர் தொட்டி சேதமடைந்திருந்தன. இதனை சீரமைக்கப்படும் என தெரிவித்த நகராட்சி அதிகாரிகள் தொட்டியை எடுத்து சென்றும் இதுவரை சீரமைக்கப்படவிலலை. சீரமைக்கப்படாத சாக்கடைகளில் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் சாக்கடை கட்டமைப்புகளை சீரமைக்க நகராட்சி முன் வர வேண்டும்., என்றனர்.

