/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலா வேன் லாரி மோதல் தமிழக பயணிகள் காயம்
/
சுற்றுலா வேன் லாரி மோதல் தமிழக பயணிகள் காயம்
ADDED : ஜன 21, 2024 05:25 AM

மூணாறு: மூணாறு அருகே வேன், லாரி நேருக்கு, நேர் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் எட்டு பேர் காயமடைந்தனர்.
தமிழகம் வேலூரைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 18 பேர் வேனில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பைப் லைன் பகுதியில் நேற்று காலை 8:00 மணிக்கு வேன் வந்தபோது எதிரே காஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரியுடன் நேருக்கு, நேர் மோதியது. அதில் சுற்றுலா பயணிகள் மணிகண்டன் 21, ரமேஷ் 24, கோகுல் 21, குணா 22, ராஜா 22, உள்பட எட்டு பேர் காயமடைந்தனர். சித்திராபுரம் குடும்ப சுகாதார மையத்தில் அனைவரும் சிகிச்சை பெற்றனர்.
பாதிப்பு
இந்த விபத்தால் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மூணாறு போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

