/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோலாகலமாக நடந்த சமத்துவ பொங்கல் விழா அரசு அலுவலகங்கள்,பள்ளி, கல்லுாரிகளில் கொண்டாட்டம்
/
கோலாகலமாக நடந்த சமத்துவ பொங்கல் விழா அரசு அலுவலகங்கள்,பள்ளி, கல்லுாரிகளில் கொண்டாட்டம்
கோலாகலமாக நடந்த சமத்துவ பொங்கல் விழா அரசு அலுவலகங்கள்,பள்ளி, கல்லுாரிகளில் கொண்டாட்டம்
கோலாகலமாக நடந்த சமத்துவ பொங்கல் விழா அரசு அலுவலகங்கள்,பள்ளி, கல்லுாரிகளில் கொண்டாட்டம்
ADDED : ஜன 14, 2024 03:59 AM

தேனி, : மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்கள், பள்ளிக் கல்லுாரிகள் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலா துறை சார்பில் நடந்த பொங்கல் விழாவிற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். எஸ்.பி., பிரவீன்உமேஷ்டோங்கரே முன்னிலை வகித்தார். அனைத்துத்துறை பணியாளர்கள் பானை உடைத்தல், பம்பரம் சுற்றுதல், கோலி விளையாடுதல், சிலம்பு சுற்றுதல், கயிறு இழுத்தல் உட்பட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். பொங்கல் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார். போட்டியில் கலெக்டர் பம்பரம் சுற்றி, ஊழியர்களை உற்சாகப்படுத்தினார்.
தேனி எஸ்.பி., அலுவலக வளாகத்தில் எஸ்.பி., பிரவீன்உமேஷ்டோங்கரே தலைமை வகித்தார். கலெக்டர் ஷஜீவனா முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் உதவி கண்காணிப்பாளர் மதுகுமாரி, ஏ.டி.எஸ்.பி.,க்கள் விவேகானந்தன், சுகுமாறன், 5 சப்-டிவிஷன் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். பொங்கல் கரும்பு வழங்கப்பட்டது.
தேனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் லட்சுமிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கோபிநாதன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன், மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரி, குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி சுரேஷ், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ரமேஷ், தேனி மாஜிஸ்திரேட் லலிதாராணி, மூத்த வழக்கறிஞர்கள் வீரசிகாமணி, சந்திரசேகரன், தெய்வேந்திரன், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன், செயலாளர் செல்வக்குமார் வரவேற்றனர். விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இணைந்து பொங்கல் வைத்து, வழக்கறிஞர் மணி வளர்த்த காளை'க்கு மரியாதை செய்து, பொங்கல், கரும்பு வழங்கப்பட்டன. பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தது. பானை உடைத்தல் போட்டியில் முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி வெற்றி பெற்றதால், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பரிசு வழங்கினர். பிற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நீதிபதிகள் பரிசுகள் வழங்கினர். விழாவில் நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். சங்கத்தின் துணைத் தலைவர் பாஸ்கரன், இணைச் செயலாளர் லோகநாதன், மகாலிங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தேனி ஒன்றிய வெங்கடாசலபுரம் வரத வேங்கடரமண மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. வரத வேங்கடரமண வித்யாலயா சபை செயலாளர் அனந்தகுமார் தலைமை வகித்தார். சபைப் பொருளாளர் சீனிவாசன், பள்ளிக்குழுச் செயலாளர் பிரசாத், உறுப்பினர் சுப்புராஜ் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தினகரன், உதவி தலைமை ஆசிரியர் என்.சீனிவாசன் செய்திருந்தனர்.
வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றார் ஆசிரியர் கழகத் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சின்னராஜா வரவேற்றார். பொங்கல் வைத்து வழங்கப்பட்டன. உழவர் திருநாள் குறித்த சிறப்புகள் எடுத்துரைக்கப் பட்டன. பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஜோதி, உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் செல்லப்பா, அனைத்து ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கூடலுார்:கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தனர். அனைத்து மதத்தைச் சார்ந்த கல்லூரி மாணவிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பொங்கல் வைத்தனர். தமிழ் கலாச்சாரம், ஒழுக்கம், பண்பாட்டின் அடையாளமாக திகழும் பொங்கல் விழாவில் சிறப்பான ஆண்டாக அமைய உறுதிமொழி எடுத்தனர். ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆண்டிபட்டி: லிட்டில் பிளவர் பள்ளியில் தைப்பொங்கல் விழா பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம், நிர்வாகி தமயந்தி ஆகியோர் தலைமையில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக மேத்யூ ஜோயல், ரேச்சல் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். தைத்திருநாளின் சிறப்புகள் குறித்து முதல்வர் உமாமகேஸ்வரி பேசினார். பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பள்ளி மாணவ மாணவிகள் பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் அமைப்பு மற்றும் தேனீ கலை இலக்கிய மையம் சார்பில் தைப்பொங்கல் விழா,பட்டிமன்றம் நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜான்சன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை பவுனம்மாள் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பிரதீப், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஹரிதாஸ் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கடமலைக்குண்டு : மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் தலைவர் சித்ரா. பி.டி.ஓ.க்கள் இளங்கோவன், பாலகிருஷ்ணன், துணை பி.டி.ஓ., ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் குழுக்கள் சார்பில் பல்வேறு போட்டிகள் நடந்தது. பொதுமக்களுக்கு பொங்கல்.மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.
கம்பம்: கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து கலைநிகழ்ச்சிகளில்பங்கேற்றனர். பாரம்பரியமான கபடி , சிலம்பம், பன்னாங்குழி, உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் 50 பானைகளில் ஆசிரியைகள் பொங்கல் வைத்தனர். குலவையிட்டு மாணவ மாணவிகளும், ஆசிரியைகளும் சூரியபகவானை வணங்கினர். பொங்கல், செங்கரும்புகளை பள்ளி தாளாளர் வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, முதல்வர் மோகன் உள்ளிட்ட ஆசிரியைகள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஆசிரியர்களுடன் இணைந்து அலுவலக மேலாளர் விக்னேஷ் செய்திருந்தார்.
தேவதானப்பட்டி:- மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கல்லூரி முதல்வர் ஐசக்பூச்சாங்குளம் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் ஜோஷிபரம் தொட்,நிதி நிர்வாக மேலாளர் பிஜோய் மங்களத்து முன்னிலை வகித்தனர். விழாவில் அமெரிக்கா செயின்ட் தாமஸ் மினிஸ்டா பல்கலை பேராசிரியர் எட்வர்டு உல்ரிஸ் பங்கேற்றார். மாவட்டத்தில் 40க்கும் அதிகமான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மதுரை காமராஜர் பல்கலை முதலிடம் பிடித்த மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

