/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீஸ் ஸ்டேஷனில் கறி விருந்து கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்
/
போலீஸ் ஸ்டேஷனில் கறி விருந்து கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்
போலீஸ் ஸ்டேஷனில் கறி விருந்து கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்
போலீஸ் ஸ்டேஷனில் கறி விருந்து கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்
ADDED : பிப் 02, 2024 12:02 AM
பெரியகுளம்-தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மீனாட்சி பணி மாறுதலில் செல்வதால் அவருக்கு நேற்று முன்தினம் போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி விருந்து கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வடகரை போலீஸ் ஸ்டேஷனில் 2021 ஜுன் 26ல் இன்ஸ்பெக்டராக மீனாட்சி பொறுப்பேற்றார். இவர் 32 மாதங்கள் இங்கு பணியாற்றினார்.
தற்போது திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை போலீஸ் ஸ்டேஷனுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
பணிமாறுதலில் செல்வதால் நேற்று முன்தினம் ஸ்டேஷனில் சாமியான பந்தல் அமைத்து 18 கிலோ எடையிலான 'கிடா' வெட்டி கறி விருந்து தடபுடலாக நடந்தது.
கறி விருந்தில் சாதம், மட்டன் சுக்கா, எலும்பு குழம்பு, சிக்கன் கிரேவி, அவித்த முட்டை என வடகரை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பறிமாறப்பட்டது.
இந்த விருந்தில் இன்ஸ்பெக்டருக்கு விசுவாசிகளாக இருந்தவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்து இன்ஸ்பெக்டர் விருந்தளித்தார். விருந்திற்கு வந்தவர்கள் சால்வை, துண்டு அணிவித்து கவுரவித்தனர்.
விருந்திற்கு அழைக்கப்பட்டாத போலீசார் பலரும் கடுப்பில் உள்ளனர். ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று வரை கறிவிருந்து சாப்பிட்ட எச்சில் இலைகள், சமையல் பாத்திரங்கள் அப்புறப்படுத்தாமல் அப்படியே உள்ளது. போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தை சமையல் கூடமாக மாற்றி, விருந்து படைத்தது குறித்து தேனி எஸ்.பி., அலுவலகம் வரை தகவல் தெரிந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

