ADDED : ஜன 24, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அல்லிநகரம் குறிஞ்சிநகர் நாகராஜன் 56. இவர் மஞ்சளாறு வடிநிலகோட்ட பொதுப்பணித்துறை அலுவலக கண்காணிப்பாளர்.
தனது டூவீலரில் பெரியகுளத்தில் உள்ள அலுவலகத்திற்கு ஜனவரி 22ல் சென்று கொண்டிருந்தார். தேனி பெரியகுளம் ரோடு ஜெயம் நகர் பிரிவு தனியார் ஷோரூம் அருகே வந்த போது ஆதிப்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தினேஷ்குமார் ஓட்டி வந்த பிக்கப் வேன் டூவீலருக்கு முன்னால் சென்று திருப்பி நிறுத்தினார். இதனால் பிக்கப் வேன் மீது, கண்காணிப்பாளர் ஓட்டிச்சென்ற டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நாகராஜன் பலத்த காயமடைந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றார்.

