/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதையில் மாடியில் இருந்து குதித்தவர் பலி
/
போதையில் மாடியில் இருந்து குதித்தவர் பலி
ADDED : ஜன 23, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: சின்னமனூர் முத்து மாயாண்டி பிள்ளை தெருவில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன் 45, இவரது மனைவி சரண்யா 35, இவர்களுக்கு திருமணம் முடிந்து 17 ஆண்டுகளாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
டிரைவராக பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் மதுபோதையில் வந்து
மனைவியை அடித்து, உதைத்துள்ளார்.
தலையில் காயம் ஏற்பட்டதால் சிசிச்சை பெற சரண்யா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் தனது வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

