ADDED : மார் 26, 2025 04:07 AM
பெரியகுளம் : பெரியகுளம வடகரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ் 25. இவர் வாரிப்பாலம் அருகே 3 அடி நீளம் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தார். இவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. வடகரை எஸ்.ஐ., மாரிச்சாமி, சூரியபிரகாஷை சோதனையிட்டார். முதுகில் மறைத்து வைத்திருந்த 3 அடி அரிவாளைகைப்பற்றினர். விசாரணையில் சூரியபிரகாஷ் தம்பி அருண்குமாரை கொலை செய்த பெரியகுளத்தைச் சேர்ந்த கார்த்திக், அஜித்குமார், சரவணன், ஜெயசெல்வம் ஆகியோரை கொலை செய்ய சுற்றித்திரிந்து தெரியவந்தது.
கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் சூரியபிரகாஷிடம் தெரிவித்து எச்சரித்தனர். இதனையும் மீறி சூரியபிரகாஷ் போலீசாரை அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்தார். போலீசார் சூரியபிரகாஷை கைது செய்தனர்.
தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 24. அரிவாளுடன் சுற்றி திரிந்தார். தேவதானப்பட்டி போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர்.
ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் ஆண்டிபட்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்த வீரனேஷ்வரன் 20. வழக்கு செலவுக்கு வழிப்பறி திருட்டில் ஈடுபட அரிவாளுடன் சுற்றியுள்ளார். வீரனேஷ்வரனை கைது செய்து, அரிவாளை கைப்பற்றினர்.-