/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடங்கல் டிஜிட்டல் மயமாக்கும் பணியில் தொடரும் மந்த நிலை பணிச்சுமையால் வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்
/
அடங்கல் டிஜிட்டல் மயமாக்கும் பணியில் தொடரும் மந்த நிலை பணிச்சுமையால் வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்
அடங்கல் டிஜிட்டல் மயமாக்கும் பணியில் தொடரும் மந்த நிலை பணிச்சுமையால் வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்
அடங்கல் டிஜிட்டல் மயமாக்கும் பணியில் தொடரும் மந்த நிலை பணிச்சுமையால் வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்
ADDED : ஜன 19, 2024 05:44 AM
கம்பம்: நிலத்தில் என்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை காட்டும் அடங்கலை டிஜிட்டல் மயமாக்கும் பணி மந்த நிலையில் உள்ளது. இப்பணியை மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாக வி.ஏ.ஓ.,க்கள் புலம்புகின்றனர்.
வருவாய்த்துறை ஆவணங்களில் சிட்டா, அடங்கல் முக்கியமானது. சிட்டா என்பது ஒரு நிலம் யார் பெயரில் உள்ளது என்பதை காட்டும். அடங்கல் அந்த நிலத்தில் என்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும்.
இதில் அடங்கல் ஆவணத்தை டிஜிட்டல் மயமாக்க மாநில வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். முதலில் வேளாண் துறை இப் பணிமேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அவர்கள் மறுத்து விட்டனர். பின்னர் வி. ஏ.ஒ , க்கள் இந்த பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
முதலில் இப்பணியை மேற்கொள்ள மறுத்து வி. ஏ.ஒ. க்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. வருவாய்த்துறை அமைச்சர் வலியுறுத்தலின் பேரில் ஆய்வு பணிகளை துவக்கினர். பணி மேற்கொள்வதில் அதிக சிரமங்கள் இருந்தது. எனவே, இப்பணிக்கென தனியாக ஒரு ஏஜென்சியை நியமித்து பணி மேற்கொள்ளவும், அந்த ஏஜன்சிக்கு ஒரு பதிவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அரசு வழங்கிட முடிவு செய்திருந்தனர். தற்போது 5 சதவீத பதிவுகளை வி.ஏ.ஓ., க்கள் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வி. ஏ.ஓ.க்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமர் கூறுகையில், ஒரு வி. ஏ. ஓ. விற்கு குறைந்தது 6 ஆயிரம் சர்வே எண்கள் உள்ளது. ஒவ்வொரு சர்வே எண் கொண்ட நிலத்திற்கும் நேரில் சென்று, நிலத்தில் நின்று போட்டோ எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதே நிலத்தில் நின்று 16 வகைபதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
சர்வர் பழுது, இணைய சேவை கிடைக்காதது ஏன பல பிரச்சனைகள் உள்ளது. ஒராண்டானாலும் இந்த பணிகளை வி.ஏ.ஓ., க்களால் நிறைவு செய்ய முடியாது. கேரளாவில் ட்ரோன் கொடுத்து 10 களப்பணியாளர்கள் நியமித்துள்ளனர். ஆனால் இங்கு அதுபோன்ற வசதிகள் இல்லை. தற்போது பேச்சுவார்த்தை மூலம் ஏஜென்சி நியமிக்க அரசு முன்வந்துள்ளது. இப்போதைக்கு 5 சதவீத பணிகளை செய்துள்ளோம் என்றார்.

