ADDED : பிப் 02, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு-இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே மணக்காடு பிரீ மெட்ரிக் பழங்குடியினர் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கொல்லத்தைச் சேர்ந்த வார்டன் ராஜீவை 41, போலீசார் கைது செய்தனர்.
அவர் விடுதியில் ஆறு ஆண்டுகளாக வார்டனாக பணியாற்றுகிறார். இவர் ஜன.26ல் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதனை விடுதி ஊழியர்களிடம் மாணவர்கள் தெரிவித்தனர். அத்தகவல் பழங்குடியினர் வளர்ச்சி துறை அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் தொடுபுழா போலீசில் புகார் அளித்தார். தொடுபுழா போலீசார் ராஜீவை கைது செய்தனர். அவர் ஐந்து மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக விசாரணையில் தெரியவந்தது.

