/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18ம் கால்வாய் மூலம் 43 கண்மாய்களில் நீர் நிரம்புமா; நிலத்தடி நீர்மட்டம் உயர எதிர்பார்க்கும் விவசாயிகள்

ADDED : ஜன 24, 2024 05:22 AM

லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் தலைமதகு பகுதியில் இருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் திட்டம் 47 கி.மீ., தூரம் கொண்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் இக்கால்வாயில் அக்டோபரில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.
கடந்த ஆண்டு நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த போதிலும் விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு மாதங்கள் தாமதமாக, டிச.19ல் தண்ணீர் திறக்கப்பட்டது. 30 நாட்களுக்கு 90 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திறக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே தம்மணம்பட்டி அருகே உள்ள தொட்டி பாலத்தில் நீர் கசிவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக லோயர்கேம்ப் தலை மதகு பகுதி அருகே டிச.31 ல் கரைப்பகுதி உடைந்து சேதம் அடைந்தது. இதனால் கால்வாயில் செல்ல வேண்டிய தண்ணீர் விவசாய நிலத்திற்குள் புகுந்தது.
இதை சீரமைப்பதற்காக முழுமையாக தண்ணீர் நிறுத்தப்பட்டு, நீர்வளத்துறையால் சீரமைப்பு பணி நடந்தது. இப்பணி முடிவடைந்து மீண்டும் ஜன. 9ல் இரண்டாவது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது.
கால்வாய் முழுவதும் பல மாதங்களாக சீரமைக்காமல் இருந்ததால் முட்புதர்கள் சூழ்ந்த நிலையில் தண்ணீர் மெதுவாக கடந்து செல்கிறது. இதனால் கால்வாயின் கடைமடை வரை செல்வது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இக் கால்வாயை நம்பியுள்ள 43 கண்மாய்களில் ஓரிரு கண்மாய்கள் மட்டும் தண்ணீர் நிரம்பிக் கொண்டிருக்கிறது.
மற்ற கண்மாய்களில் தண்ணீர் நிரம்புவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. கண்மாய் முழுவதும் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இதனை நம்பியுள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும். அதனால் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு 43 கண்மாய்களும் நிரம்பும் வரை கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.