/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் கூடைப்பந்து போட்டி துவக்கம்
/
மகளிர் கூடைப்பந்து போட்டி துவக்கம்
ADDED : ஜன 21, 2024 05:22 AM

--பெரியகுளம்: மாவட்ட மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டியில் பெரியகுளம் பி.டி.சி., நினைவு கூடைப்பந்து அணி முன்னிலை பெற்றது.
பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவில் மகளிர் கூடைப்பந்து போட்டி நேற்று துவங்கியது. இந்த போட்டிகளில் பி.டி.சி., நினைவு கூடைப்பந்து அணி, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி அணி, ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி அணி, தேனி நாடார் சரஸ்வதி கலை கல்லூரி அணி, பொறியியல் கல்லூரி அணி, போடி ஹூப்ஸ்டார் அணி ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.
போட்டிகள் லீக் சுற்று மற்றும் நாக் அவுட் போட்டிகளாக நடக்கிறது. நேற்றைய போட்டியை மாவட்ட கூடைப்பந்து தலைவர் சிதம்பரசூரியவேலு துவக்கி வைத்தார். முதல் போட்டியில் பி.டி.சி., நினைவு கூடைப்பந்து அணியும், தோட்டக்கலை கல்லூரி அணியும் மோதியது. பி.டி.சி., அணி 54:39 புள்ளி கணக்கில் முதல் வெற்றி பெற்றனர். 2வது போட்டியில் போடி ஹூப்ஸ்டார் அணியும், ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி அணியும் மோதியது.
இதில் ஹூப்ஸ்டார் அணி 31:25 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இறுதிப்போட்டிகள் நடக்கிறது.

