/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காய்கறி விதை, பழத்தொகுப்பு பெற விண்ணப்பிக்கலாம்
/
காய்கறி விதை, பழத்தொகுப்பு பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 25, 2025 07:13 AM
தேனி: தோட்டக்கத்துறையின் ஊட்டசத்து வேளாண் இயக்க திட்டத்தில் இத்தொகுப்பு நுாறு சதவீத மானியத்தில் காய்கறி விதைகள், பழச்செடிகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இத்தொகுப்பில் ரூ.60 மதிப்பிலான தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, கீரை ஆகிய விதைகள் தொகுப்பு, ரூ.100 மதிப்பிலான கொய்யா, பப்பாளி, எலுமிச்சை பழச்செடிகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் இரு தொகுப்புகள் வழங்கப்படும். பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. விருப்பமுள்ளவர்கள் உழவர் செயலி, tnhorticulture.gov.in என்ற இணைய பக்கத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம், என தோட்டக்கலைத் துணை இயக்குநர் நிர்மலா தெரிவித்துள்ளார்.