/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலியில் " கானா " என்று பெயரெடுத்தவர் காலமானார்
/
திருநெல்வேலியில் " கானா " என்று பெயரெடுத்தவர் காலமானார்
திருநெல்வேலியில் " கானா " என்று பெயரெடுத்தவர் காலமானார்
திருநெல்வேலியில் " கானா " என்று பெயரெடுத்தவர் காலமானார்
UPDATED : மார் 26, 2025 08:35 AM
ADDED : மார் 26, 2025 06:55 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க., பிரமுகர் இன்று (மார்ச் 26) அதிகாலை காலமானார்.இவருக்கு வயது 76.
திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க., பிரமுகர், எம்.ஜி.ஆர்.காலத்தில் 1977, 1980 மற்றும் 2006ல் தி.மு.க.,வில் சட்டசபை உறுப்பினராக இருந்தவர். ஆளும் கருப்பு பெயரும் கருப்பு ஆனால் உள்ளமோ வெள்ளை என எம்.ஜி.ஆ.,ரால் பாராட்டப்பட்டவர். நெல்லை மாவட்டத்தில் இவரை கட்சியினர் அனைவரும் கானா என்றே செல்லமாகவும், மரியாதையாகவும் அழைத்தனர்.
மீண்டும் அதிமுகவில் செயலாற்றியவர். கடந்த 2015ம் ஆண்டு மே 14ம் தேதி திமுக விலிருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டார். 2016 ஜூலை 26-ம் தேதி அ.தி.மு.க.,வில் சேர்த்துக்கொள்ளப் பட்டார்.
இன்று (மார்ச் 26) அதிகாலை தூங்கி கொண்டிருந்த போது மாரடைப்பால் காலமானார்.
வாழ்க்கை வரலாறு
பிறப்பு: 1 ஜூலை 1948
இறப்பு: 26 மார்ச் 2025
அரசியல் கட்சி: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
வீ. கருப்பசாமி பாண்டியன், தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும், அதிமுகவின் முக்கிய தலைவராகவும் செயலாற்றியவரும் ஆவார். அவர் 1977, 1980, 2006 தேர்தல்களில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
அரசியல் பயணம்:
1977 ல் ஆலங்குளம் மற்றும் 1980 தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சார்பில் பாளையங்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் திமுகவில் இணைந்து, 2006 தேர்தலில் திமுக சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.