/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையில் வெள்ள பாதிப்பு மத்திய குழு 2ம் கட்ட ஆய்வு
/
நெல்லையில் வெள்ள பாதிப்பு மத்திய குழு 2ம் கட்ட ஆய்வு
நெல்லையில் வெள்ள பாதிப்பு மத்திய குழு 2ம் கட்ட ஆய்வு
நெல்லையில் வெள்ள பாதிப்பு மத்திய குழு 2ம் கட்ட ஆய்வு
ADDED : ஜன 13, 2024 10:54 PM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று 2ம் கட்டமாக ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் டிச., 17, 18ல் பெய்த அதிகன மழையால் தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்டது. மிகுந்த பாதிப்புகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் டிச., 21ல் மத்திய குழுவினர் பார்வையிட்டனர். தற்போது 2ம் கட்டமாக பார்வையிடுகின்றனர்.
நேற்று முன்தினம் துாத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர்கே.பி.சிங், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் தலைமை பொறியாளர் எஸ்.விஜயகுமார், ஜல் சக்தி அமைச்சக இயக்குனர் ஆர்.தங்கமணி, நிதித்துறை துணை இயக்குனர் ரங்கநாத் ஆடம், மத்திய வேளாண் இயக்குனர் கே.பொன்னுசாமி, மின்சாரத்துறை துணை இயக்குனர் ராஜேஷ் திவாரி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் கே.எம்.பாலாஜி ஆகியோர் ஆய்வில் இரு குழுக்களாக பிரிந்து சென்றனர்.
வண்ணார்பேட்டை பாலாமடை, சுத்தமல்லி, கருப்பந்துறை, முன்னீர்பள்ளம் கோபாலசமுத்திரம், நடுக்கல்லூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர். குழுவினருடன் கலெக்டர் கார்த்திகேயன், சேரன்மகாதேவி சப் - கலெக்டர் ஆர்பிக் ஜெயின், மாநகராட்சி கமிஷனர் தாக்கரே உள்ளிட்டோர் சென்றனர்.

