/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தென்மேற்கு பருவ மழையால் அணைகள் நிரம்புகின்றன ஆக்கிரமிப்பால் நிரம்பாத நம்பியாறு அணை
/
தென்மேற்கு பருவ மழையால் அணைகள் நிரம்புகின்றன ஆக்கிரமிப்பால் நிரம்பாத நம்பியாறு அணை
தென்மேற்கு பருவ மழையால் அணைகள் நிரம்புகின்றன ஆக்கிரமிப்பால் நிரம்பாத நம்பியாறு அணை
தென்மேற்கு பருவ மழையால் அணைகள் நிரம்புகின்றன ஆக்கிரமிப்பால் நிரம்பாத நம்பியாறு அணை
ADDED : ஜூன் 27, 2025 02:53 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகள் நிரம்புகின்றன. ஆனால் ஆக்கிரமிப்பால் நம்பியாறு அணை மட்டும் நிரம்பாமல் காய்ந்து கிடக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக மாஞ்சோலை, நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் 44 மி.மீ., ஊத்து எஸ்டேட்டில் 37 மி.மீ. காக்காச்சியில் 25 மி.மீ., மாஞ்சோலையில் 20 மி.மீ.,மழை பெய்தது. சேர்வலாறு அணை பகுதியில் 30 மி.மீ. பாபநாசத்தில் 22 மி.மீ. ராதாபுரத்தில் 4 மி.மீ. மழை பெய்தது. 143 அடி உயரமுள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் 133 அடியாக உள்ளது. அணைக்கு 2790 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 1500 கன அடி வீதம் நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. 156 அடி உயரமுள்ள சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உள்ளது. 118 அடி உயரமுள்ள மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 95 அடியாக உள்ளது. அணைக்கு 540 கன அடி வீதம் நீர் வரத்துள்ளது. அணையில் இருந்து 75 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 12 அடி, 22 அடி உயரம் உள்ள நம்பியாறு அணை நீர்மட்டம் 13 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாததாலும் நம்பியாறு கால்வாய் முழுவதும் ஆக்கிரப்புகளாலும் நீர் வரத்து கால்வாய் தூர்வாரப்படாததாலும் நம்பியாறு அணை ஒரு குளம் போல் தேங்கி கிடக்கிறது .இதே போல திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு அணை பகுதியிலும் மழை இல்லாததால் அணைக்கு நீர் வரத்து இல்லை.
நிரம்பியது
தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணைப்பகுதியில் 67 மி.மீ.,மழை பெய்தது. அணைக்கு 240 கன அடி வீதம் நீர் வரத்துள்ளது. 132 அடி உயரமுள்ள அடவிநயினார் அணை நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. செங்கோட்டை குண்டாறு அணைப்பகுதியில் 52 மி.மீ.,கடனாவில் 7 மி.மீ., தென்காசியில் 8 மி.மீ., சிவகிரியில் 14 மி.மீ. மழை பெய்தது. 36 அடி உயரமுள்ள குண்டாறு அணை நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. 72 அடி உயரம் உள்ள கருப்பா நதி அணைக்கட்டில் 67 அடி உயரம் தண்ணீர் உள்ளது. 84 அடி உயரமுள்ள ராமநதி அணையில் 74 அடி தண்ணீர் உள்ளதால் அணைக்கு வரும் 60 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
85 அடி உயரமுள்ள கடனாநதி அணைக்கட்டில் தற்போது 75 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 159 கன அடி வீதம் நீர் வரத்துள்ளது. அணையில் இருந்து 150 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.