/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பத்திரப்பதிவில் அரசுக்கு கோடிக்கணக்கில் நிதி இழப்பு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
/
பத்திரப்பதிவில் அரசுக்கு கோடிக்கணக்கில் நிதி இழப்பு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
பத்திரப்பதிவில் அரசுக்கு கோடிக்கணக்கில் நிதி இழப்பு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
பத்திரப்பதிவில் அரசுக்கு கோடிக்கணக்கில் நிதி இழப்பு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
ADDED : ஜன 10, 2024 01:00 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மேலப்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசுக்கு கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்படும் வகையில் நில மதிப்பை குறைத்து பத்திரங்கள் மேற்கொள்வது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் மேலப்பாளையம் பத்திரப் பதிவு அலுவலகம் செயல்படுகிறது. இப்பகுதிக்கு உட்பட்ட ஆரைகுளம் பகுதியில் ஏற்கனவே இறந்து போன செல்லம்மாள் என்பவரது நிலத்தை விற்பனை செய்வதாக போலியாக பத்திரப்பதிவு மேற்கொண்டனர்.
செல்லம்மாள் இறந்த பிறகும் அவர் உயிரோடு இருப்பதாக உயிர் வாழ் சான்றிதழ் பெற்று பத்திரப்பதிவு நடந்துள்ளது.
இது குறித்து செல்லம்மாளின் சகோதரர் உச்சிமுத்து, கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். இறந்து போன செல்லம்மாள் உயிரோடு இருப்பதாக சான்றிதழ் அளித்த இரு டாக்டர்கள் குறித்து மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லதா விசாரணை மேற்கொண்டார்.
இணை இயக்குனர் கூறுகையில், சம்பந்தப்பட்ட இரு டாக்டர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்து இருந்தேன். இதில் ஒரு டாக்டர் மட்டுமே வந்திருந்தார். இன்னொருவர் விசாரணைக்கு வரவில்லை. அவர் உண்மையிலேயே டாக்டர் தானா என்பது தெரியவில்லை. எனவே இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் என்றார். போலியான சான்றிதழ் கொண்டு பத்திரப் பதிவு செய்த மேலப்பாளையம் பத்திரபதிவு அலுவலகம் தற்போது மற்றொரு புகாரில் சிக்கியுள்ளது. பீடி நிறுவனம் ஒன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குறைத்து மதிப்பு காண்பித்து பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் பத்திரப் பதிவு துறைக்கு கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு பத்திரப்பதிவு அலுவலர்கள் உடனடியாக இருந்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் பெர்டின் ராயன், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசின் சென்னை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனை பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த மோசடி குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

