/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
போராட்டத்திற்கு பின் அயோத்தி விழாவுக்கு அனுமதி
/
போராட்டத்திற்கு பின் அயோத்தி விழாவுக்கு அனுமதி
ADDED : ஜன 23, 2024 12:53 AM
பாளையங்கோட்டை : பாளையங்கோட்டை கோபாலசாமி கோவில் தனியார் மண்டபத்தில் நேற்று காலை அயோத்தி விழா நிகழ்வை திரையிட ஏற்பாடுகள் செய்திருந்தனர். போலீசார் அங்கிருந்தவர்களை வெளியேற்றி, மண்டபத்திற்கு பூட்டு போட்டனர்.
இதை கண்டித்து, ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 'அயோத்தி கும்பாபிேஷக நிகழ்வை தனியார் மண்டபங்களில் திரையிட போலீஸ் அனுமதி தேவையில்லை' என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டன.
அதையடுத்து, போலீசார் அனுமதி அளித்தனர். காலை 11:00 மணி முதல் தனியார் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் அயோத்தி கோவில் கும்பாபிேஷகம் நிகழ்வு திரையிடப்பட்டது. இதுபோலவே, மாநிலத்தின் பல ஊர்களிலும் போலீசார் கெடுபிடி செய்தனர்; பின், அனுமதித்தனர்.

