/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: ஓய்வு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
/
அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: ஓய்வு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: ஓய்வு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: ஓய்வு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 01, 2025 12:08 AM
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் துணை வணிகவரி அதிகாரியாக பணியாற்றியபோது வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி வி.எம். சத்திரத்திரத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் 73. இவர் 2000 முதல் 2010 வரை திருநெல்வேலியில் உதவி மற்றும் துணை வணிகவரி அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் ஓய்வு பெற்ற இவர் இந்த 10 ஆண்டுகளில் வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ., மெஸ்கலரின் எஸ்கால் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அரசு அதிகாரியாக இருந்தாலும் தான் தனியாரில் பணியாற்றுவதாக கூறி அரசு ஒதுக்கீட்டில் மனை பெற்றுள்ளார் எனவும் குற்றப் பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த திருநெல்வேலி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுப்பையா, வருமானத்தை விட அதிகமாக ரூ.18 லட்சத்து 31 ஆயிரம் அதிகம் சொத்து சேர்த்ததற்காக சுந்தரத்திற்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ .50 ஆயிரம் அபராதமும் விதித்தார். அவர் சேர்த்த அசையும் ,அசையா சொத்துக்களை மேல்முறையீட்டு காலத்திற்குப் பிறகு உரிய மதிப்பீட்டில் அரசுடைமை ஆக்கவும் உத்தரவிட்டார்.