/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் பாதிப்பு
/
மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 29, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, கீழ் வடகரை இந்திரா காந்தி நகரை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள பள்ளியில் படிக்கின்றனர். இவர்களுக்கு, நேற்று முன்தினம் பள்ளியில் சுகாதாரத் துறையினர் சத்து மாத்திரைகள் வழங்கினர்.
கையில் மாத்திரைகளை வைத்திருந்த ஏழாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர், யார் அதிகம் மாத்திரைகளை உட்கொள்வது என போட்டி போட்டு உட்கொண்டனர். அதனால், அவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
களக்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.