ADDED : அக் 14, 2025 08:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே விஷக்குளவி கொட்டியதில், பெண் உட்பட மூவர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் செஞ்சி பானம்பாக்கத்தில், பள்ளி அருகே உள்ள மின்கம்பத்தில் விஷக்குளவிகள் கூடுகட்டி இருந்தது. நேற்று காலை செஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், 45, சத்யராஜ், 40 மற்றும் சத்யவாணி, 68, ஆகிய மூவரும் அவ்வழியாக நடந்து சென்றனர்.
அப்போது, திடீரென மின்கம்பத்தில் இருந்த விஷக்குளவிகள் கொட்டின. இதில், காயமடைந்த மூவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்பு துறை வீரர்கள், மின்கம்பத்தில் இருந்த குளவி கூட்டை அகற்றினர். கடம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

