/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார் மோதி 35 வெள்ளாடுகள் உயிரிழப்பு
/
கார் மோதி 35 வெள்ளாடுகள் உயிரிழப்பு
ADDED : ஜன 13, 2024 10:54 PM
காஞ்சிபுரம்:மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்; ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு சொந்தமான, 68 வெள்ளாடுகளை நேற்று, தண்டலம் கிராம வயல்வெளியில், மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார்.
நேற்று, மாலை 6:30 மணிக்கு ஏகனாபுரம் கிராமத்திற்கு செல்வதற்கு, பள்ளூர்-சோகண்டி சாலை ஓரத்தில் ஆடுகளை ஓட்டி சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, பரந்துாரில் இருந்து, மதுரமங்கலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த, கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட, 'ஹூண்டாய் ஐ-20' கார், சாலை ஓரம் சென்ற ஆடுகள் மீது மோதியது.
இதில், 35 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இது குறித்து, காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காரை ஓட்டி சென்ற, அம்ரூத், 30, என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

