/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல்
/
அரசு மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல்
ADDED : ஜன 23, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் பாலாஜி, 38. இவர் 20ம் தேதி இரவு, பொன்னேரி அடுத்த முஸ்லீம் நகர் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன் கையில் இருந்த காயத்திற்கு கட்டுப்போட வந்தான்.
மற்றொரு நோயாளிக்கு, கட்டுப்போடும் பணியில் இருந்த பாலாஜியிடம் சிறுவன் உடனடியாக தனது காயத்திற்கு சிகிச்சை அளிக்கும்படி வற்புறுத்தினார்.சிறிது நேரம் காத்திருக்கும்படி பாலாஜி தெரிவித்தார். அப்போது சிறுவன் பாலாஜியை தகாத வார்த்தைகளால் தாக்கிவிட்டு சென்றார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனை தேடி வருகின்றனர்.

