/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
100 நாள் வேலையில் பழத்தோட்டம் செழிக்கிறது பாலாபுரம் ஊராட்சி
/
100 நாள் வேலையில் பழத்தோட்டம் செழிக்கிறது பாலாபுரம் ஊராட்சி
100 நாள் வேலையில் பழத்தோட்டம் செழிக்கிறது பாலாபுரம் ஊராட்சி
100 நாள் வேலையில் பழத்தோட்டம் செழிக்கிறது பாலாபுரம் ஊராட்சி
ADDED : ஜன 24, 2024 12:44 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் ஊராட்சியில், ஆர்.ஜெ.கண்டிகையை ஒட்டியுள்ள மலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
கரடு முரடாக கிடந்த மலைப்பகுதியை சீரமைத்தனர். சீரமைக்கப்பட்ட மலைச்சரிவில், பாசன வசதிக்காக குழாய்கள் பதிக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அதிலும், அத்தி, ஆல், மா, பலா, கொய்யா, சப்போட்டா, நாவல் என பழ மரக்கன்றுகள் அதிகளவில் நடவு செய்யப்பட்டன.
மேலும், கத்தரி, வெண்டை, தக்காளி, பூசணி என பல்வேறு வகையான காய்கறி செடிகளும் ஊடுபயிராக பயிரிடப்பட்டன.
மலைச்சரிவின் செம்மண் பரப்பில், மரக்கன்றுகளும், காய்கறி செடிகளும் செழித்து வளர்ந்து வருகின்றன. தினசரி 20 பணியாளர்கள், இந்த தோட்டத்தில் பாசனம் மற்றும் களைபறிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஓராண்டாக, காய்கறி பறித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, முந்திரி மற்றும் நாவல் மரங்கள் காய்க்கும் பருவத்தை எட்டியுள்ளன. ஆல், அத்தி உள்ளிட்ட பழ ரகங்கள், பறவைகளுக்கு உணவளிக்கும் விதமாக இங்கு வளர்ந்துள்ளன. தரிசாக கிடந்த மலை, தற்போது பழமர தோப்பாக மாறியுள்ளது.

