ADDED : ஜூன் 15, 2025 02:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி:உலக குருதி கொடையாளர் நாளை முன்னிட்டு, பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு கிராமத்தில், நேற்று ரத்ததான முகாம் நடந்தது.
அனுப்பம்பட்டு ஊராட்சி மன்றம் மற்றும் அப்பாவு அறக்கட்டளை சார்பில் நடந்த முகாமில், இரு தம்பதி உட்பட, 29 பேர் பங்கேற்று, ரத்ததானம் அளித்தனர்.
வேல்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மருத்துவ குழுவினர், முகாமில் பங்கேற்றவர்களுக்கு உடல் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.