/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கரில் இன்று தெப்ப திருவிழா துவக்கம்
/
சோளிங்கரில் இன்று தெப்ப திருவிழா துவக்கம்
ADDED : ஜன 20, 2024 11:22 PM

சோளிங்கர்,ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில், பெரிய மலையில் யோக நரசிம்மரும், சின்னமலையில் யோக அனுமனும் அருள்பாலித்து வருகின்றனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த தலத்திற்கு, ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தி பக்தோசித பெருமாள் சன்னிதி, சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம், ஞாயிற்று கிழமைகளில், பெரிய மலை மற்றும் சின்னமலையில் சிறப்பு தரிசனம் நடைபெறும்.
யோக நிலையில் உள்ள சுவாமி, கார்த்திகையில் கண் திறந்து அருள்புரிவதாக ஐதீகம். தீர்த்த குளமான தக்கான் குளம், கொண்டபாளையம் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த குளத்தில், தை மாதத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டின் தெப்ப உற்சவம், இன்று துவங்கி 23ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

