/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதர்மண்டி வீணாகும் கிராம சேவை மையம்
/
புதர்மண்டி வீணாகும் கிராம சேவை மையம்
ADDED : ஜன 23, 2024 05:20 AM

கனகம்மாசத்திரம்: திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமாபுரம் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு 2013 -14ம் ஆண்டு, 13 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தாசிரெட்டி கண்டிகை பகுதியில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது.
இந்த கிராம சேவை மையம் கட்டடம் கட்டப்பட்டு, 8 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் இதனை குடி மையமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த கட்டடங்கள் சுற்றி செடி கொடிகள் வளர்ந்துள்ளது.
எனவே பயன்பாடின்றி பாழாகும் கிராம சேவை மைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

