/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் மாடுகள் ஓய்வு வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
/
நெடுஞ்சாலையில் மாடுகள் ஓய்வு வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
நெடுஞ்சாலையில் மாடுகள் ஓய்வு வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
நெடுஞ்சாலையில் மாடுகள் ஓய்வு வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
ADDED : டிச 01, 2025 04:34 AM

மப்பேடு: நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை வழியாக, தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் வளர்க்கப்படும் மாடுகள், நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிகின்றன.
இதனால், வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், அவ்வப்போது சிறு சிறு விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
திருவள்ளூர் கலெக்டர், எஸ்.பி., உத்தரவிட்டும், நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

