/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழடைந்து வரும் மண்டபம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
/
பாழடைந்து வரும் மண்டபம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
பாழடைந்து வரும் மண்டபம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
பாழடைந்து வரும் மண்டபம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
ADDED : பிப் 01, 2024 08:04 PM

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் இணைந்தது திருவாலங்காடு காளியம்மன் கோவில். இங்கு கோவில் வளாகத்தில் மண்டகபடி மண்டபம் அமைந்துள்ளது.
இந்த மண்டகபடி மண்டபம் என்பது அபிஷேக மண்டபம் ஆகும். இங்கு பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் 10 நாள் உற்சவத்தில் வடாரண்யேஸ்வரர் நான்காம் நாள் நாக வாகன உற்சவத்தில் எழுந்தருளி பின்னர் இந்த மண்டபத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் செல்வார்.
அத்தகு சிறப்பு வாய்ந்த இந்த மண்டபம், 30 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்து உள்ளது.
இந்த மண்டபம் பாழடைந்து வருவதால் சீரமைக்க வேண்டும் என பல முறை கோவில் நிர்வாகத்துக்கு உபயதாரர்கள், பக்தர்கள் வாயிலாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திருத்தணி கோவில் நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மண்டகப்படி மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

