/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் பொருட்காட்சி 28ல் நிறைவு
/
திருவள்ளூரில் பொருட்காட்சி 28ல் நிறைவு
ADDED : ஜன 26, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக ரோட்டில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பொருட்காட்சி நடக்கிறது.
இந்த பொருட்காட்சியில், லண்டன் பிரிட்ஜ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பேன்ஸி பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் இடம்பெறுகின்றன. திரளான குழந்தைகள் பெற்றோர்களுடன் வந்து பார்த்து மகிழ்கின்றனர்.
இதுகுறித்து பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர் சவுந்தரபாண்டியன் கூறியதாவது:
கடந்த டிச. 31 முதல் மாலை 5:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை நடக்கும் இந்த பொருட்காட்சி வரும் 28 ல் நிறைவு பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

