/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொது - வாலிபரிடம் போலீசார் பணம் பறிப்பு
/
பொது - வாலிபரிடம் போலீசார் பணம் பறிப்பு
ADDED : ஜூன் 15, 2025 08:33 PM
வானகரம்:கொளத்துாரைச் சேர்ந்தவர் கணேஷ், 30; லோடு ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு, வானகரம் சர்வீஸ் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி, திருநங்கையுடன் தனிமையில் சென்று திரும்பிவந்தார்.
அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட வானகரம் காவல் நிலைய போலீசார் அரவிந்தன் மற்றும் சிவானந்தம் ஆகியோர், கணேஷை தடுத்து நிறுத்தி, பணம் கேட்டுள்ளனர்.
அவர் பணம் தர மறுக்கவே, அவரது மொபைல் போனை வாங்கி, 'ஜிபே' செயலி வாயிலாக 3,000 ரூபாயை தங்கள் வங்கி வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்த புகாரையடுத்து வானகரம் போலீசார் விசாரித்தனர். பணத்தை பிடுங்கிய போலீசார், அதை திருப்பி தந்ததால், கணேஷ் புகாரை திரும்ப பெற்று, சமரசமாக சென்றார்.