/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
12,000 ஏக்கர் பரப்பளவில் பசுந்தாள் உரம் சாகுபடி
/
12,000 ஏக்கர் பரப்பளவில் பசுந்தாள் உரம் சாகுபடி
ADDED : மார் 26, 2025 07:40 PM
திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்டம், எல்லாபுரம் வட்டரம், லட்சியவாக்கம் ஊராட்சியில் 'நிறைந்தது மனம்' திட்டத்தில், பசுந்தாள் உரம் பயிரிடப்பட்டுள்ள விவசாயி மோகன் என்பவரின் நிலத்தில், கலெக்டர் பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவரது நிலத்தில், 'மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், 4 ஏக்கர் பரப்பளவில், பசுந்தாள் உர சாகுபடி செய்து பயன்பெற்றதை கலெக்டர் பாராட்டினார்.
பின் அவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், 2024 - -25ம் ஆண்டில் 'மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 20 கிலோ மட்டும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் வாயிலாக பசுந்தாள் உர விதைகள், கிலோ 99.50 ரூபாயில் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டது.
அதன்படி, மாவட்டத்தில் 14 வட்டத்திலும், 12,059 ஏக்கர் பரப்பளவில், 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுந்தாள் உரங்கள் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் கலாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்- வேளாண்மை மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.