/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனைவி இறந்த துக்கம்: கணவன் தற்கொலை
/
மனைவி இறந்த துக்கம்: கணவன் தற்கொலை
ADDED : ஜன 24, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் தண்டலம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 47. இவரது மனைவி அமுதா. கடந்த 25 நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
இதனால் வேதனையில் இருந்த ராஜா கடந்த 21ம் தேதி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் படுக்கையறையில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராஜா மகன் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் கடம்பத்துார் போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

