/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கரில் திறந்தவெளி கழிவுநீர் மருத்துவமனை அருகே சுகாதார கேடு
/
சோளிங்கரில் திறந்தவெளி கழிவுநீர் மருத்துவமனை அருகே சுகாதார கேடு
சோளிங்கரில் திறந்தவெளி கழிவுநீர் மருத்துவமனை அருகே சுகாதார கேடு
சோளிங்கரில் திறந்தவெளி கழிவுநீர் மருத்துவமனை அருகே சுகாதார கேடு
ADDED : ஜன 23, 2024 05:23 AM
சோளிங்கர்: ராணிப்பேட்டை மா வட்டம், சோளிங்கரில், பேருந்து நிலையம் அருகே, அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதையொட்டி, பழைய கோர்ட் வளாகம் அமைந்துள்ளது.
சோளிங்கர் அரசு பொது மருத்துவமனைக்கு, சோளிங்கர் ஒன்றியம் மட்டும் இன்றி, ஆர்.கே.பேட்டை தாலுகாவை சேர்ந்தவர்களும் அவசர மருத்துவ உதவிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், இந்த மருத்துவமனைக்கும், பழைய கோர்ட் வளாகத்திற்கும் இடையே உபரிநீர் கால்வாய் பாய்கிறது. திறந்தவெளியாக பாயும் இந்த கால்வாய் நீண்ட காலமாக துார்வாரி சீரமைக்கப்படாததால், தற்போது துார்ந்து கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது.
மருத்துவமனைக்கு வருபவர்களும், இதை கடந்து பேருந்து நிலையத்திற்கு செல்பவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். நகரின் முக்கியமான பகுதியில் உள்ள இந்த கால்வாயை துார் வாரி சுத்தம் செய்ய வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.