/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் தேன்கூடு ஊழியர்கள், பொது மக்கள் அச்சம்
/
கலெக்டர் அலுவலகத்தில் தேன்கூடு ஊழியர்கள், பொது மக்கள் அச்சம்
கலெக்டர் அலுவலகத்தில் தேன்கூடு ஊழியர்கள், பொது மக்கள் அச்சம்
கலெக்டர் அலுவலகத்தில் தேன்கூடு ஊழியர்கள், பொது மக்கள் அச்சம்
ADDED : மார் 26, 2025 02:19 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீர் கூட்டமும், அவ்வப்போது ஓய்வூதியதாரர், முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டமும் நடைபெறும்.
இந்த கூட்டங்களில் பங்கேற்க, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 300க்கும் மேற்பட்டோர் வந்து செல்வர். மேலும், இந்த வளாகத்தில் செயல்பட்டு வரும் சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்கும், தினமும் 50க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.இந்த அலுவலகத்தில், 350க்கும் மேற்பட்ட அரசு அலுவலர், ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், கார் நிறுத்தம் இடத்தின் கூரையில், பெரிய அளவிலான தேன் கூடு உள்ளது.
அவ்வப்போது, கூட்டில் இருந்து தேனீக்கள் பறந்து பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வந்து செல்லும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் ஊழியர்களும், மக்களும் அச்சத்துடனே உள்ளனர். எனவே, அச்சுறுத்தி வரும் தேன் கூட்டை, பொதுப்பணித் துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.