/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில் நிறுவனம் மறுசீரமைப்பு கடனுதவி வழங்கும் முகாம்
/
தொழில் நிறுவனம் மறுசீரமைப்பு கடனுதவி வழங்கும் முகாம்
தொழில் நிறுவனம் மறுசீரமைப்பு கடனுதவி வழங்கும் முகாம்
தொழில் நிறுவனம் மறுசீரமைப்பு கடனுதவி வழங்கும் முகாம்
ADDED : ஜன 09, 2024 08:41 PM
திருவள்ளூர்:'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், 'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறுசீரமைப்பிற்கான நிதியுதவியை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், 1-3 லட்சம் ரூபாய் வரை , 6 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படும். இத்திட்டம் வரும், 31 வரை நடைமுறையில் இருக்கும்.
இது குறித்தான விழிப்புணர்வு முகாம், மாவட்டத் தொழில் மையத்துடன் இணைந்து, நேற்று திருமழிசை தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கட்டடத்தில் நடந்தது.
இன்று காக்களூர் தொழிற்பேட்டை, நாளை விச்சூர் தொழிற்பேட்டை, வரும் 12ல், காட்டுப்பாக்கம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் சங்க அலுவலகத்தில் முகாம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

