sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தாட்கோ வாயிலாக மாணவருக்கு ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி

/

தாட்கோ வாயிலாக மாணவருக்கு ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி

தாட்கோ வாயிலாக மாணவருக்கு ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி

தாட்கோ வாயிலாக மாணவருக்கு ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி


ADDED : மார் 25, 2025 06:31 PM

Google News

ADDED : மார் 25, 2025 06:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:தாட்கோ மற்றும் சி.பி.சி.எல்., இணைந்து மாணவர்களுக்கு ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.

கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ஜே.இ.இ., எனப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியை பெற பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் 65 சதவீதமும், பிற இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம், 4 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லுாரியில் தங்கி பயிலவும், உணவு மற்றும் தங்கும் இடத்திற்கான கட்டண தொகையும் அந்நிறுவனமே ஏற்றுக் கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us