/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புகாரளிக்க வந்த பெண்களை தாக்கிய கனகம்மாசத்திரம் ஏட்டு 'சஸ்பெண்ட்'
/
புகாரளிக்க வந்த பெண்களை தாக்கிய கனகம்மாசத்திரம் ஏட்டு 'சஸ்பெண்ட்'
புகாரளிக்க வந்த பெண்களை தாக்கிய கனகம்மாசத்திரம் ஏட்டு 'சஸ்பெண்ட்'
புகாரளிக்க வந்த பெண்களை தாக்கிய கனகம்மாசத்திரம் ஏட்டு 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 25, 2025 02:42 AM
திருவாலங்காடு,:புகாரளிக்க வந்த மூன்று பெண்களை தாக்கியதாக, ஏட்டு ராமனை, மாவட்ட எஸ்.பி., நேற்று 'சஸ்பெண்ட்' செய்தார்.
திருவாலங்காடு ஒன்றியம், நெடும்பரம் காலனியைச் சேர்ந்தவர் அருண், 39. இவரது நண்பர் சிவாஜி, 38.
இருவரும் நேற்று முன்தினம், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில், 'கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 40, மதுமிதா, 37, ஆகியோர், எங்களை தகாத வார்த்தைகளால் பேசியும், ஜாதி பெயரால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்தனர்' என, தனித்தனியாக புகார் அளித்தனர்.
இதையறிந்த மதுமிதா, நேற்று காலையில் தன் தோழியர் தனம், 40, செவ்வந்தி, 39, ஆகியோருடன், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த ஏட்டு ராமனிடம், 'சிவாஜி எங்களின் மொபைல் போனுக்கு தவறான முறையில் மெசேஜ் அனுப்புகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் அளிக்க வந்தனர்.
ஆனால், தலைமை காவலர் ராமன், புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிவாஜிக்கு ஆதரவாக ஏட்டு ராமன் செயல்படுகிறார் என, மதுமிதா தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த ஏட்டு ராமன் மூன்று பெண்களையும் தாக்கி வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும், மதுமிதா, தனம், செவ்வந்தி ஆகிய மூவரும், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
ஏட்டு ராமன் மூவரையும் துரத்தியடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள், ஏட்டு ராமனை, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அதேபோல, அருண், சிவாஜி கொடுத்த புகாரின்படி மதுமிதா, மணிகண்டன் மீதும், மதுமிதா கொடுத்த புகாரின்படி அருண், சிவாஜி மீதும் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.