/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி வீணாகும் மெதுார் ஊராட்சி பூங்கா
/
பராமரிப்பின்றி வீணாகும் மெதுார் ஊராட்சி பூங்கா
ADDED : ஜன 24, 2024 12:42 AM

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், மெதுார் ஊராட்சியில், கடந்த, 2019ல் தாய் திட்டத்தின் கீழ், 30 லட்சம் ரூபாய் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது.
நடைபயிற்சி மேற்கொள்ள தனிப்பாதை, ஓய்வு எடுக்க இருக்கைகள், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம், சிறுவர்களுக்கான விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இது அமைக்கப்பட்டது.
தொடர் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாமல், மேற்கண்ட அம்மா பூங்கா பயன்பாடு இன்றி பாழடைந்து கிடக்கிறது. வளாகம் முழுதும், புற்கள், முட்செடிகள் சூழ்ந்து உள்ளன. சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து கிடக்கின்றன. பூங்காவின் சுற்றுச்சுவர் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கிரில்கள் உடைத்து எடுக்கப்பட்டு உள்ளன.
உடற்பயிற்சி கூடத்தில் இருந்த உபகரணங்களும் மாயாகி உள்ளன.
தற்போது வளாகம் முழுதும் தண்ணீர் தேங்கி உள்ளது. பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி வீணாகி வருவது சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றிய நிர்வாகமும் அரசு பணம் வீணாவது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

